வசதிகளை பிடுங்கிவிட்டு மைக்ரா விலையை குறைக்கும் நிசான்

நிசான் நிறுவனத்தின் முக்கிய மாடலாக மைக்ரா ஹேட்ச்பேக் கார் திகழ்கிறது. ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மைக்ராவின் விலை சற்று அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் உணர்கின்றனர்.
இதனால், விற்பனையில் மைக்ரா மிக மிக மிதமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், மைக்ராவின் விற்பனையை அதிகரிக்க பல புதிய மார்க்கெட்டிங் யுக்திகளை நடைமுறைப்படுத்த நிசான் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கும்.
மைக்ராவின் சில வசதிகளை குறைத்துவிட்டு விலையை கணிசமாக குறைத்து அறிமுகம் செய்ய நிசான் முடிவு செய்துள்ளது. ரூ.50,000 அளவுக்கு மைக்ராவின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ஹோண்டா பிரியோ, ஹூண்டாய் ஐ10 ஆகிய கார்களுக்கு சவாலான விலையில் மைக்ராவின் பேஸ் வேரியண்ட் வரும் என தெரிகிறது. அதேவேளை, மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்களின் விலையில் மாற்றங்கள் இருக்காது என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








