ஆட்டோமேட்டிக் மைக்ரா, சன்னி கார்களை களமிறக்கும் நிசான்

நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டுவதற்கு ஆட்டோமேட்டிக் கார்கள் சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் கவனம் மெல்ல ஆட்டோமேட்டி கார்கள் பக்கம் திரும்பி வருகிறது.
இதனால், அனைத்து நிறுவனங்களும் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களை அறிமுகப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மைக்ரா, சன்னி கார்களின் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்துகிறது நிசான்.
ஆட்டோமேட்டிக் மாடல்களின் மைலேஜ் குறைவாக இருக்கும். எனவே, அதிக மைலேஜ் தரும் வகையில் மைக்ரா மற்றும் சன்னி கார்களின் எஞ்சின்கள் டியூனிங் செய்யப்பட்டிருக்கும் என நிசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தனது மார்க்கெட் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என நிசான் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








