அக்டோபரில் அறிமுகமாகிறது நிசான் டஸ்ட்டர் எஸ்யூவி!

By Saravana

பண்டிகை கால நெருக்கத்தில் நிசான் டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது. ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலை தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. என்எச்79 என்ற பெயரில் தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் இந்த எஸ்யூவியின் மீது வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஏனெனில், ரெனோ டஸ்ட்டரை விட இந்த எஸ்யூவியை குறைந்த விலையில் நிசான் அறிமுகப்படுத்த இருப்பதாக வெளியான தகவல்கள்தான் இதற்கு முக்கிய காரணம். நிசான் களமிறக்கும் டஸ்ட்டரின் முகப்பு மற்றும் பின்புறம் முற்றிலும் புதிய தோற்றத்தை கொண்டதாக இருக்கும். அதாவது, நிசானின் எக்ஸ்- ட்ரெயில் எஸ்யூவியின் முகப்பு மற்றும் பின்புற தோற்றத்தை மனதில் வைத்து நிசான் டஸ்ட்டர் மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Nissan Duster

ரெனோ டஸ்ட்டரில் தற்போது பின்புறத்தில் 2 இருக்கைகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில் டீலரில் பொருத்தி தரப்படுகிறது. இதேபோன்று, தனது டஸ்ட்டரையும் பின்புறத்தில் 2 இருக்கைகள் கொண்டதாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் நிசான் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, இன்டிரியரும் அதிக மாற்றங்கள் செய்யபப்படுகின்றன. இதனால், ரெனோ டஸ்ட்டருக்கும், நிசான் டஸ்ட்டருக்கும் அதிக வேறுபாடுகளை காண முடியும். வரும் அக்டோபரில் நிசான் டஸ்ட்டர் விற்பனைக்கு வரும் என நிசான் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, May 25, 2013, 17:16 [IST]
English summary
Japanese car maker Nissan is planning to launch it's own Duster in Indian market. As per information Nissan will launch Duster by October this year.
மேலும்... #nissan #four wheeler #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+