சென்னையில் நாளை நிசான் டெரானோ ரிலீஸ்!
சென்னையில் நடைபெறும் விழாவில் நாளை நிசான் டெரானோ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த விழாவில் நிசான் டெரானோ இந்திய சந்தைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் முதல் முன்பதிவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நிசான் டெரானோ நாளை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
நிசான் மோட்டால்ஸ் இந்தியப் பிரிவு தலைவர் கெனிசிரோ யமுரா டெரானோவை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
நிசான் டெரானோ 6 விதமான வண்ணங்களில் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலில் வரும் இந்த புதிய எஸ்யூவி டஸ்ட்டர் மற்றும் ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேர் போட்டியாக இறங்குகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் டெலிரிவியும் துவங்க உள்ளது. ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








