20ந் தேதி நிசான் டெரானோ அறிமுகமாகிறது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வரும் 20ந் தேதி மும்பையில் நடைபெறும் இருக்கும் விழாவில் நிசான் டெரானோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான இந்த காரில் பல்வேறு காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் 2 மாதிரி படங்களை மட்டும் நிசான் வெளியிட்டது. இந்த நிலையில், சவால்கள் நிறைந்ததாக மாறி வரும் காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டெரானோவுடன் நிசானும் களமிறங்குகிறது.

டீசலில் மட்டும்

டீசலில் மட்டும்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், டெரானோ டீசல் மாடலில் மட்டுமே வர இருக்கிறது.

 டெலிவிரி

டெலிவிரி

வரும் அக்டோபரில் இந்த புதிய காரின் டெலிவிரி துவங்கப்படும் என்று நிசான் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கூடுதல் விலை

கூடுதல் விலை

ரெனோ டஸ்ட்டரைவிட நிசான் டெரானோ ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை கூடுதலான விலையில் வரும் என தெரிகிறது.

ஈக்கோஸ்போர்ட் தாக்கம்

ஈக்கோஸ்போர்ட் தாக்கம்

ஈக்கோஸ்போர்ட் தாக்கத்தால் ரெனோ டஸ்ட்டரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டஸ்ட்டரை விட கூடுதலான விலையில் வரும் நிசான் டெரானோ விற்பனையில் கைகொடுக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும், டஸ்ட்டரைவிட வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கும் என்பது கூடுதல் பலமாக கூறலாம்.

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டத்திலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2013, 10:17 [IST]
English summary
Japanese car maker Nissan to launch Terrano on Aug 20th in Mumbai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+