சென்னையில் 2வது ஆலையை அமைக்க ரெனோ-நிசான் முடிவு!
கார் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சென்னையில் 2வது புதிய கார் ஆலையை அமைக்க ரெனோ-நிசான் கூட்டணி முடிவு செய்துள்ளது.
சென்னை அருகே ஒரகடத்தில் ரெனோ மற்றும் நிசான் நிறுவனங்கள் கூட்டாக அமைத்துள்ள கார் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. ரூ.4,500 கோடியில் இந்த ஆலை கட்டப்பட்டது.

ஆண்டுக்கு 2,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் நிசானின் மைக்ரா, சன்னி மற்றும் ரெனோவின் பல்ஸ், ஸ்காலா உள்ளிட்ட கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கார் உற்பத்தியை அதிகரிக்க இந்த கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை ஒரகடத்தில் உள்ள தற்போதைய ஆலையையொட்டி இரண்டாவது ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஆலை செயல்பட துவங்கினால் ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த புதிய ஆலை கட்டுமானத்திற்காக 320 மில்லியன் டாலர்களை ரெனோ-நிசான் கூட்டணி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஆலை மூலம் உள்நாட்டு தேவை மட்டுமின்றி ஏற்றுமதி தேவையையும் நிறைவு செய்ய முடியும். இந்த செய்தி ஜப்பானிலிருந்து வெளியாகும் வர்த்தக நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








