இந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரெயிலை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்!
பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மிக கவர்ச்சியான டிசைன் கொண்ட புதிய நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக பழமையான டிசைன் கொண்ட இரண்டாம் தலைமுறை எஸ்யூவி இந்தியாவில் போனியாகவில்லை.
ஆனால், இந்த புதிய எக்ஸ்ட்ரெயில் வடிவமைப்பில் மிக அசத்தலாக இருப்பதால், நிச்சயம் நிசானுக்கு இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெற்று தரும் வாய்ப்புள்ளது. உலக அளவில் 190 நாடுகளில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளதோடு, 9 நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதில், சென்னை ஒரகடம் ஆலையும் ஒன்றாக இருக்கும் என்பது சமீபத்திய தகவலாக உள்ளது. எனவே, இந்த எஸ்யூவி இந்தியா வருவது உறுதி என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

மூன்றாம் தலைமுறை
நிசான் - ரெனோ நிறுவனங்களின் Common Module Family(CMF) என்ற நவீன கட்டமைப்பு அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்மில் சிறிய, பெரிய வடிவத்திலான 9 கார் மாடல்களை நிசான் மற்றும் ரெனோ நிறுவனங்கள் வடிவமைக்க உள்ளன.

டிசைன்
இப்போது விற்பனையில் இருக்கும் மாடலுக்கும், புதிய மாடலுக்கும் சம்பந்தமே இல்லை. மேலும், வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரண்டிலும் படு கவர்ச்சியாக இருக்கிறது டிசைன்.

7 சீட்டர்
இந்த புதிய எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி 7 சீட்டர் லே அவுட்டில் வருவதும் வாடிக்கையாளர்களை கவரும் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

குறைவான விலை
சிஎம்எஃப் பிளாட்பார்மிலான இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செலவு மிக குறைவானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாகங்களில் மட்டுமே 30 சதவீதம் அளவுக்கு மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்போது மிக சவாலான விலையில் வரும் வாய்ப்புள்ளது.

எஞ்சின்
தற்போது இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிசான் நிறுவனத்தின் எக்ஸ் ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

வசதிகள்
ஏராளமான வசதிகளுடன் இந்த புதிய எஸ்யூவி வர இருக்கிறது. 2 வீல் டிரைவ், ஆல் வீல் டிரைவ் மாடல்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
ரூ.20 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போட்டியாளர்களுக்கு நிச்சயம் நெருக்கடியை அளிக்கும்.


Click it and Unblock the Notifications








