எக்ஸ்யூவி500வுக்கு போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்கும் நிசான்!!

டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான டெரானோவை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் நிசான் அடுத்த 12 மாதங்களில் புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்கள் மற்றும் விலையில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிசான் கேஷ்கிதான் அந்த எஸ்யூவி.

ஐரோப்பிய டிசைன்

ஐரோப்பிய டிசைன்

நிசான் நிறுவனத்தின் ஐரோப்பிய டிசைன் சென்டரால் வடிவமைக்கப்பட்ட முதல் ஐரோப்பிய மாடல் இது. 2006ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள சுந்தர்லேண்ட் ஆலையில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது. 2007ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது.

 புதிய பிளாட்பார்ம்

புதிய பிளாட்பார்ம்

நிசான் நிறுவனத்தின் பி32 எல் என்ற புதிய பிளாட்பார்மில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டது. நிசானின் புதிய கிராஸ்ஓவர் மாடல்கள் இந்த எஸ்யூவியை அடிப்படையாக் கொண்ட வடிவமைக்கப்படுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடனும், 1.5 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் சர்வதேச மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

வேறு மார்க்கெட்

வேறு மார்க்கெட்

ஐரோப்பிய மார்க்கெட் தவிர, நிசானின் தாயகமான ஜப்பானிலும், ஆஸ்திரேலியாவிலும் டூயலிஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

ஆஃப் ரோடு அம்சங்களையும் கொண்டிருக்கும் இந்த எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களில்ஐ ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது.

உயரதிகாரி சூசகம்

உயரதிகாரி சூசகம்

இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கான சாதக, பாதக அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, நிசானின் உயரதிகாரி ஆண்டி பால்மர் சூசகமாக கூறியுள்ளார்.

எக்ஸ்யூவிக்கு போட்டி

எக்ஸ்யூவிக்கு போட்டி

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வசதிகளுடனும், விலையுடன் இந்த எஸ்யூவி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2013, 16:14 [IST]
English summary
Japanese automaker Nissan is now said to be evaluating the launch of yet another crossover/compact SUV - the Nissan Qashqai. Why an SUV? The answer is clear. Despite the excise hike, the SUV segment is still going strong compared to the premium sedan segment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+