பிரேக்கில் கோளாறு: மைக்ரா, சன்னி கார்களை திரும்ப பெறும் நிசான்

By Saravana
Nissan Sunny
பிரேக்கில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னையை சரிசெய்து தருவதற்காக இந்தியாவில் மைக்ரா, சன்னி கார்களை திரும்ப பெற இருப்பதாக நிசான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " முக்கிய பிரேக் சிலிண்டரில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த பிரச்னையால் இதுவரை விபத்து மற்றும் இதர பிரச்னைகள் குறித்து புகார்கள் வரவில்லை.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாகத்தை இலவசமாக மாற்றி தர இருக்கிறோம். இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 22,188 மைக்ரா மற்றும் சன்னி கார்கள் திரும்ப பெறப்படும்.

இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக தகவல் அனுப்பப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி, ஆசிய, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட 67,089 மைக்ரா, சன்னி கார்களை நிசான் திரும்ப பெற இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது.

மைக்ரா, சன்னி கார்களை தொழில்நுட்ப பிரச்னை காரணமாக நிசான் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த கார்களின் ரீபேட்ஜ் மாடல்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனோ நிறுவனத்தின் பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்களும் திரும்ப பெறப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2013, 15:46 [IST]
English summary
Nissan India announces to recall 22,188 Micra hatchback and Sunny sedan in India to replace the master brake cylinder at free of cost.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+