ரூ.5.79 லட்சம் விலையில் சன்னி: நிசான் அதிரடி ஆஃபர்

கடந்த 2011ம் ஆண்டில் மார்க்கெட்டுக்கு வந்த நிசான் சன்னி இடவசதியில் சிறந்த காராக அறியப்பட்டுள்ளது.
சொகுசு கார்களுக்கு இணையான இடவசதி, மைலேஜ், விலை என மூன்றிலும் நிறைவான மாடலாக சன்னி இருக்கிறது.
இந்த நிலையில், சன்னி காரை மிகக்குறைந்த ஆரம்ப விலையில் சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை நிசான் வழங்குகிறது.
சன்னியின் பேஸ் வேரியண்ட் தற்போது ரூ.5.79 லட்சம் என்ற சலுகை விலையில் தற்போது கிடைக்கிறது.
மேலும், இது குறைந்த கால சலுகை என நிசான் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வரும் சன்னியை சொந்தமாக்கிக் கொள்ள இந்த அரிய வாய்ப்பை நிசான் வழங்குகிறது.
கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகுமாறு நிசான் கேட்டுக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications