நிசான் டெரானோவுக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!!
நிசான் டெரானோவுக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான டெரானோ அறிமுகம் செய்யப்பட்டது.
வரும் செப்டம்பர் 1 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டீலர்களில் டெரானோவுக்கு தற்போது ரகசிய முன்பதிவு நடந்து வருகிறதாம். ரூ.50,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுவதாக டீலர் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

நம்பக மாடல்
டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடல் என்பதால் வாடிக்கையாளர்கள் தயங்காமல் சென்று முன்பதிவு செய்கின்றனராம்.

விலை
ரூ.10 லட்சத்துக்குள் வரும் என்று நிசான் தெரிவித்துள்ளதும் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிமியம்
டஸ்ட்டரைவிட பிரிமியம் இன்டிரியருடன் இந்த கார் வருகிறது. எனவே, டஸ்ட்டரை விட்டு தற்போது டெரானாவுக்கு தாவ வாடிக்கையாளர் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நிசான் டீலர் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃப்ரெஷ் டஸ்ட்டர்
எல்லாவற்றையும் விட டஸ்ட்டர் மார்க்கெட்டுக்கு வந்து ஓர் ஆண்டுக்களுக்கு மேல் ஆகி பழகிய மாடலாகிவிட்டதால், சற்று ஃப்ரெஷ்ஷாக வரும் டெரானோவை தேர்வு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எஞ்சின்
டஸ்ட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சினுடன் நிசான் டெரானோ வர இருக்கிறது. இந்த எஞ்சின்கள் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நம்பகத் தன்மையை பெற்றுவிட்டதும், மைலேஜில் குறை வைக்காததும் டெரானோவுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








