நிசான் டெரானோ எஸ்யூவிக்கு 6,000 பேர் முன்பதிவு
சென்னையில் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிசான் டெரானோ எஸ்யூவிக்கு 6,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிசான் டெரானோவுக்கு கடந்த மாதம் முதல் முன்பதிவு நடந்து வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காத்திருப்பு காலத்தால் நொந்து போன பல வாடிக்கையாளர்களை கவரும் விதமாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே டெரானோவுக்கு நிசான் முன்பதிவை துவங்கியது.
இதற்கு பலனளிக்கும் விதத்தில் தற்போது டெரானோவுக்கு 6,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனோ டஸ்ட்டரைவிட கூடுதல் கம்பீரத்துடன் வந்திருப்பதும், சில பிரிமியம் அம்சங்களை கொண்டிருப்பதும் டெரானோவுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் முறையே ரூ.9.78 லட்சம் மற்றும் ரூ.9.58 லட்சம் விலையில் டெரானோ கிடைக்கிறது. நிசான் டெரானோவுக்கு தற்போது 45 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக நிசான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








