நிசான் டெரானோ வேரியண்ட் வாரியாக விபரங்கள் கசிந்தன
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிசான் டெரானோவிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. இந்தநிலையில், டெரானோவின் வேரியண்ட் வாரியான அம்சங்கள் குறித்த விபரங்கள் கசிந்துள்ளன.
பெட்ரோல் மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டிலும், டீசல் மாடல் 6 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். வேரியண்ட் வாரியாக இடம்பெற்றிருக்கும் நிரந்தர அம்சங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எக்ஸ்எல் வேரியண்ட்
1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் ஒரே ஒரு எக்ஸ்எல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். ஏபிஎஸ், இபிடி, 2 டின் மியூசிக் சிஸ்டம், பியானோ பிளாக் சென்ட்ரல் கன்சோல், பனி விளக்குகள் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

எக்ஸ்இ வேரியண்ட்
எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டில் டிரைவர் சைடு ஏர்பேக், முன்பக்க, பின்பக்க பவர் விண்டோஸ் மற்றும் மல்டி இன்பர்ஃமேஷன் டிஸ்ப்ளே ஆகியவற்றை நிரந்தர அம்சங்களாக வழங்க உள்ளது தெரிய வந்துள்ளது.

எக்ஸ்எல் வேரியண்ட்
பேஸ் வேரியண்ட்டுக்கு அடுத்த வேரியண்ட்டான எக்ஸ்எல் வேரியண்ட்டில் ஏபிஎஸ், இபிடி, 2 டின் மியூசிக் சிஸ்டம், பியானோ பிளாக் சென்ட்ரல் கன்சோல் மற்றும் பனி விளக்குகள் நிரந்தரமாக இடம்பெறும்.

110 பிஎஸ் எக்ஸ்வி வேரியண்ட்
6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 110 பிஎஸ் பவர் கொண்ட எக்ஸ்வி டாப் வேரியண்ட்டில் ஏபிஎஸ், இபிடி, 16 இஞ்ச் அலாய் வீல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ரியர் ஏசி வென்ட் மற்றும் லெதர் இருக்கைகள் இடம் பெற்றிருக்கும்.

110 பிஎஸ் எக்ஸ்வி ப்ளஸ்
லெதர் இருக்கைகள், முன்பக்க, பின்பக்க ஆர்ம்ரெஸ்ட்டுகளில் ஸீப்ரா வுட் பினிஷிங் உள்ளிட்டவை கூடுதலாக இருக்கும்.

எஞ்சின் விபரம்
டஸ்ட்டர் போன்றே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 85 பிஎஸ் மற்றும் 110 பிஎஸ் பவர் ஆப்ஷன்களில் கிடைக்கும். 1.6 லிட்டர் பெட்ரோல் மாடலிலும் வருகிறது. 85 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலும், 1.6 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும், 110 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும் பொருத்தப்பட்டு இருக்கும்.


Click it and Unblock the Notifications








