அக்.9ல் டெரானோ விற்பனைக்கு அறிமுகம்... வரவேற்பை பெறுமா?

By Saravana

டெரானோ பற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகிவிட்ட நிலையில், அடுத்த மாதம் 9ந் தேதி நிசான் டெரானோ முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று விலை விபரங்களை நிசான் அறிவிக்க உள்ளது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் நிசான் அறிமுகம் செய்யும் டெரானோ புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. தீபாவளிக்கு முன்னதாக வரும் டெரானோவுக்கு மார்க்கெட்டில் நிலவும் சில சாதகங்களையும், ஒரு சில பாதங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஈக்கோஸ்போர்ட் வெயிட்டிங் பீரியட்

ஈக்கோஸ்போர்ட் வெயிட்டிங் பீரியட்

ஈக்கோஸ்போர்ட்டுக்கு இப்போது 10 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருப்பதோடு, சில வேரியண்ட்டுகளுக்கு முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல வாடிக்கையாளர்கள் டஸ்ட்டரைவிட புதிய மாடலாக வரும் நிசான் டொரனோ பக்கம் திரும்பும் வாய்ப்பு இருக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

கடந்த 1ந் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால், விற்பனைக்கு வரும்போது ஒரு கணிசமான புக்கிங் எண்ணிக்கையுடன் மார்க்கெட்டில் களமிறங்கும். மேலும், ஈக்கோஸ்போர்ட் காத்திருப்பு காலம் சீரடையும் வரை நிசான் டெரானோவுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிமியம் அம்சங்கள்

பிரிமியம் அம்சங்கள்

விலை சற்று அதிகமிருந்தாலும், டஸ்ட்டரைவிட கூடுதல் பிரிமியம் அம்சங்களுடன் வருவதும் டெரானோ மீது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஈர்ப்பு ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிக விலை

அதிக விலை

ஈக்கோஸ்போர்ட்டின் கட்டுப்பாட்டில் வந்துள்ள காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலாக வரும் நிசான் டெரானோ விலையில் டஸ்ட்டரைவிட கூடுதலான விலையில் வருவதால் கூடுதல் வாடிக்கையாளர்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.ரூ.10 லட்சத்திற்குள் வரும் என நிசான் தெரிவித்துள்ளது.

சர்வீஸ் நெட்வொர்க்

சர்வீஸ் நெட்வொர்க்

ரெனோவைவிட நிசான் சர்வீஸ் நெட்வொர்க் குறைவாக இருப்பதும் டெரானோவை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் சற்று யோசித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிசான் கணக்கு

நிசான் கணக்கு

ஒரு சில பாதக அம்சங்களை காட்டிலும், ஈக்கோஸ்போர்ட் காத்திருப்பு காலத்தால், டெரானோவுக்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என நிசான் கணக்கு போட்டுள்ளது. இந்த கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2013, 11:54 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+