ரூ.10.55 லட்சத்தில் எவாலியா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!
சத்தமில்லாமல் மேம்படுத்தப்பட்ட எவாலியா காரின் புதிய வேரியண்ட்டை நிசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நிசான் இந்தியா இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட எவாலியா காரின் விலை உள்ளிட்ட சில முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட எவாலியாவில் எக்ஸ்வி எஸ் என்ற புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எக்ஸ்வி டாப் வேரியண்ட்டை விட இது ரூ.30,000 கூடுதலாகும்.

இந்த புதிய எவாலியாவின் உட்புற மாற்றங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. நடு வரிசையில் கேப்டன் இருக்கைகள், முழுமையான கிளவ் பாக்ஸ் மற்றும் நடு வரிசைக்கு தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
மேம்படுத்தப்பட்ட எவாலியாவில் பின்புற வைப்பர் மற்றும் புதிய டிசைன் கொண்ட 15 இஞ்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. 85 பிஎச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் அதே 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின்தான் மேம்படுத்தப்பட்ட எவாலியாவிலும் தொடர்ந்து செயல்புரியும்.


Click it and Unblock the Notifications








