உலகின் அதிவேக எலக்ட்ரிக் ரேஸ் காரை களமிறக்கும் நிசான்!
எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில் ஜப்பானிய நிறுவனமான நிசான் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. சிறந்த எலக்ட்ரிக் கார்களை தயாரித்து அறிமுகப்படுத்தி வரும் நிசான் தற்போது உலகின் அதிவேக எலக்ட்ரிக் ரேஸ் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸீரோ ஆர்சி என்று குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் ரேஸ் கார் அடுத்த ஆண்டு 24 ஹவர்ஸ் லீ மேன்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. இந்த புதிய காரை நிசான் எஞ்சினியர்கள் ZEOD RC "world's fastest racing car" என்று அழைக்கின்றனர்.
அடுத்த 12 மாதங்களில் இந்த காரை பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்த நிசான் எஞ்சினியர்கள் திட்டமிட்டுள்ளனர். சாதாரண எலக்ட்ரிக் கார்களை விட இது இரு மடங்கு அதிவேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக, அதாவது மணிக்கு 300 கிமீ வேகத்தை வெகு எளிதாக இந்த கார் எட்டும் என நிசான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முழுமையான தொழில்நுட்ப விபரங்களை நிசான் வெளியிடவில்லை. ஸீரோ ஆர்சி எலக்ட்ரிக் ரேஸ் காரின் படங்களை மட்டும் வெளியிட்டுள்ளது. அதனை ஸ்லைடரில் காணலாம்.



















Click it and Unblock the Notifications








