எஸ்யூவி மீதான கூடுதல் வரி வாபஸ் கிடையாது: சிதம்பரம் திட்டவட்டம்

மத்திய பட்ஜெட்டில் எஸ்யூவி கார்களுக்கான 27 சதவீத உற்பத்தி வரி 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனை திரும்ப பெறுமாறு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
மேலும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று சியாம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். மேலும், கார் விற்பனை மந்தமாக இருந்து வரும் நிலையில், எஸ்யூவி மீதான வரி விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"எஸ்யூவி கார்கள் மீது உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெறும் வாய்ப்பு இல்லை.
மேலும், பல்வேறு காரணங்களால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டுள்ளதை உணர்கிறோம். அதில் முக்கியமானது வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது. எனவே, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி ஆளுனர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்,"என்றார்.


Click it and Unblock the Notifications








