ஃபெராரி கார்தான் உங்க கனவா?- இதப் படிச்சு பாருங்க!!

ஃபெராரி கார்தான் எனது கனவு என்று பிரபலங்கள் கூறுகின்றனர். அதை பார்த்த நம்மில் பலரும் கையிலிருக்கும் ஆல்ட்டோவை உதாசீனமாக பார்த்துவிட்டு ஃபெராரியுடன் கனவில் ஓர் பயணம் கிளம்புவிடுகிறோம். ஆனால், ஃபெராரி கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார்களா என்பதுதான் இங்கே கேள்வி.

இந்த கேள்விக்கு பதில் தேடி ஆக்ஸா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில், ஃபெராரி கார் வைத்திருக்கும் பெரும்பாலானோர் திருப்தியாக இல்லை என்று தெரியவந்தது. சாதாரண காரை ஓட்டும்போது கிடைக்கும் சுகம் கூட இந்த காரை ஓட்டும்போது கிடைக்கவில்லை என்ற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

Ferrari Car

ஃபெராரியின் சர்வீஸும், ஃபெராரி காரை ஓட்டுவதும் போதிய திருப்தி தரவில்லை என ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 43 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளோர் ஃபெராரி கார் திருப்தி தருவதாக கூறியுள்ளனர்.

இதேபோன்று, பிஎம்டபிள்யூ, அஸ்டன் மார்ட்டின், லெக்சஸ், சீட் மற்றும் பீஜோவின் தயாரிப்புகளை வைத்திருக்கும் உரிமையாளர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கும் உரிமையாளர்களில் 83 சதவீதத்தினர் காரை ஓட்டுவது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டனர்.

அஸ்டன் மார்ட்டின் மற்றும் லெக்சஸ் உரிமையாளர்கள் 78 சதவீத்தினரும், சீட் கார் உரிமையாளர்களில் 786 சதவீதத்தினரும், பீஜோ கார் வைத்திருப்பவர்களில் 75 சதவீதத்தினரும் கார் ஓட்டுவதை சந்தோஷமாகவும், திருப்தியும் அடைவதாக தெரிவித்தனர்.

இதற்கு நேர்மாறாக லேண்ட்ரோவர் வைத்திருக்கும் 59 சதவீத உரிமையாளர்களும், வால்வோ கார் வைத்திருக்கும் உரிமையாளர்களில் 46 சதவீத்தினரும் தங்களது கார் ஓட்டும் அனுபவம் சிறப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2013, 12:27 [IST]
English summary
Surprised? So are we. A new research conducted by insurance firm AXA Group has found that only 57 percent of those who own a Ferrari actually enjoy driving their exotic, million dollar cars. The research was conducted in the U.K and consisted of 2000 participants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+