பெங்களூரில் ஒபெல் கார்சா ஈக்கோஃப்ளக்ஸ் கார் சோதனை!
பெங்களூரில் ஒபெல் கார்சா ஈக்கோஃப்ளக்ஸ் கார் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒபெல் பிராண்டில் கார்சா, அஸ்ட்ரா, செயில் உள்ளிட்ட கார்களை இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை விற்பனை செய்து வந்தது.
பின்னர் ஒபெல் பிராண்டு கார்களின் விற்பனையை இந்தியாவிலிருந்து முற்றிலுமாக நிறுத்தியது. இந்த நிலையில், பெங்களூரில் ஒபெல் பிராண்டின் கார்சா ஈக்கோஃப்ளக்ஸ் கார் சோதனை செய்யப்பட்டிருப்பதால், மீண்டும் ஒபெல் பிராண்டு இங்கே வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், பெங்களூரில் சோதனை செய்யபப்பட்ட கார் 2 கதவுகள் அமைப்பை கொண்டது என்பதால், இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்பு குறைவாகவே கூறப்படுகிறது. பெங்களூரில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருவதால், பிற மார்க்கெட்டுக்காக இந்த கார் சோதனை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








