பகனியின் புதிய எந்திர கருஞ்சிறுத்தை!!
பகனியின் ஸோண்டா கார் அதிவேகத்துக்கு புகழ்பெற்றது. இந்த நிலையில், 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸோண்டா காரின் இறுதி பதிப்பாக ரிவொலியூசியன் என்ற பெயரில் புதிய ஸோண்டா காரை பகனி அறிமுகம் செய்துள்ளது.
கார்பன் டைட்டானியம் மோனோகாக் சேஸியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் 2,258 பவுண்ட் எடை கொண்டது.இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தியிருக்கின்றனர். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் துணைபுரியும். 12 ஸ்டெப் டிராக்ஷன் கன்ட்ரோல், டிராக் ரிடக்ஷன் கன்ட்ரோல், கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.
இந்த கார் 2.2 மில்லியன் யூரோ விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையினர் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த புதிய காரின் அசத்தலான படங்களை ஸ்லைடரில் காணலாம்.















Click it and Unblock the Notifications








