பெட்ரோல், டீசல் பயன்பாடு: உண்மையை போட்டு உடைத்த ஆய்வு!!
நாட்டின் மொத்த பெட்ரோல் பயன்பாட்டில் இருசக்கர வாகனங்களுக்குத்தான் அதிக செலவழிவதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் நுகர்வை குறைக்க வேண்டும் என்றும் அதற்கான மானியத்தை நிறுத்தினால் மட்டுமே பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாடு மேலாண்மைக்காக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
நீல்சன் என்ற பிரபல சர்வே நிறுவனம் இந்த ஆய்வை மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்காக ஏற்று நடத்தியது.
இதில், நாட்டின் ஒட்டுமொத்த பெட்ரோல் பயன்பாட்டில் 62 சதவீதம் இருசக்கர வாகனங்களுக்கு செலவழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்களுக்கு 27 சதவீதம் மட்டுமே பெட்ரோல் பயன்படுத்தப்படுவதாகவும், ஆட்டோரிக்ஷாக்களுக்கு 6 சதவீதமும், 2 சதவீதம் ஜெனரேட்டர் உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்காகவும் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, டீசல் பயன்பாட்டில் போக்குவரத்து தேவைகளுக்காக 66 சதவீதம் போகிறது. வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள், பஸ்கள், டிரக்குகள் மற்றும் மினி வேன்களுக்காக 38 சதவீத டீசல் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்களால்தான் அதிக அளவில் பெட்ரோல், டீசல் நுகர்வு இருப்பதாகவும், அதற்கான மானியத்தை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், சாமானிய மக்களின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமாக விளங்கும் இருசக்கர வாகனங்களால்தான் அதிக பெட்ரோல் செலவாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








