5.40 லட்சம் கிமீ., அலுக்காமல் ஓடிய பீஜோ கார்!

பிரான்ஸ் நிறுவனமான பீஜோவின் 205 கார் நம்பகத்தன்மை வாய்ந்த கார் என்ற பெருமையை வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ளது. இதனை பரைசாற்றும் விதமாக இங்கிலாந்திலுள்ள சவுதம்ப்டன் பகுதியை சேர்ந்த ஜான் கிளைவ் என்பவரது கார் 5.40 கிலோமீட்டர் தூரம் ஓடி அசத்தியிருக்கிறது.
கடந்த 1990ல் இந்த காரை ஜான் கிளைவ் வாங்கியிருக்கிறார். குறித்த நேரத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்ததால் இதுவரை எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் இந்த கார் ஓடியிருக்கிறது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் ஜான் கிளைவ் காலாமானார்.
இதையடுத்து, தனது ஓட்டத்தை இந்த கார் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஜான் கிளைவ் மனைவி கூறுகையில்," இந்த காரை ஜான் மிகவும் நேசித்தார். சரியான சமயத்தில் சர்வீஸ் செய்ய மறக்க மாட்டார்.
ஷாப்பிங் முதல் தொலைதூர பயணங்கள் என அனைத்துக்கும் உறுதுணையாகவும், எங்களது குடும்பத்தில் ஒருவரை போல இந்த கார் இருந்தது. மிகவும் நம்பகமான கார். எனது கணவர் இந்த காரை ஃப்ளை என்றுதான் அழைப்பார்," என்று கூறினார்.
பீஜோ தொடர்பு துறை இயக்குனர் ஆன்ட்ரூ டிடிலிக் கூறுகையில்," 1980களில் பீஜோ கடும் நெருக்கடியில் சிக்கி மீண்டும் உயிர்த்தெழுந்ததற்கு 205 கார் மிக முக்கிய காரணம். ஜான் கிளைவ் போன்றே அனைத்து வாடிக்கையாளர்களும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த காராக குறிப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
1990ம் ஆண்டு கார் ஆஃப் தி டிகேட்(10 ஆண்டுகளில்) சிறந்த கார் விருதும் பெற்றது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








