2013ம் ஆண்டின் சிறந்த 'பிளேபாய்' கார் மாடல்கள் லிஸ்ட்
பிரபல பிளேபாய் இதழ் ஆண்டுதோறும் சிறந்த கார்களை தேர்வு செய்து வெளியிட்டு வருகிறது. இதேபோன்று, 2013ம் ஆண்டின் சிறந்த கார் மாடல்களின் பட்டியலை பிளேபாய் இதழ் வெளியிட்டிருக்கிறது.
பல்வேறு பிரிவுகளில் கார் மாடல்களை தேர்வு செய்து பிளேபாய் அறிவித்துள்ளது. பிளேபாய் தேர்வு செய்து அறிவித்துள்ள 2013ம் ஆண்டின் சிறந்த கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறந்த கார் மாடல்
2012ம் ஆண்டின் சிறந்த கார் மாடலாக ஏழாம் தலைமுறை போர்ஷே 911 காரை தேர்வு செய்து அறிவித்துள்ளது பிளேபாய்.

சிறந்த ரோட்ஸ்டெர் மாடல்
2013 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல் 550 கார்தான் கடந்த ஆண்டின் சிறந்த ரோட்ஸ்டெர் மாடலாக பிளேபாய் தேர்வு செய்துள்ளது.

சிறந்த எஸ்யூவி மாடல்
முழுவதும் அலுமினியம் பாடியால் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய 2013 லேண்ட்ரோவரின் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியாக தேர்வு செய்துள்ளது.

சிறந்த ஸ்போர்ட் செடான்
பிஎம்டபிள்யூவின் எம் 5 செடான் காரை சிறந்த ஸ்போர்ட் செடானாக பிளேபாய் அறிவித்துள்ளது.

சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்
மெக்லேரன் எம்பி4- 12சி சிறந்த சூப்பர் காராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








