இந்தியாவின் முதல் ஆஃப்ரோடு ஆம்புலன்ஸ்!!

By Saravana

டெல்லியில் நடந்த அவசர மருத்துவ சேவை கண்காட்சியில் அனைத்து சாலைகளிலும் செல்லத்தக்க ஆஃப்ரோடு ஆம்புலன்ஸ் வாகனத்தை போலரிஸ் பார்வைக்கு வைத்திருந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் இதுபோன்று அவசர மருத்துவ உதவிக்கு தேவையான பல கருவிகள் மற்றும் வாகனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் முதல் ஆஃப்ரோடு ஆம்புலன்ஸ் வாகனமாக கூறப்படும் போலரிஸ் ஆம்புலன்ஸ் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 போலரிஸ் ரேஞ்சர்

போலரிஸ் ரேஞ்சர்

போலரிஸ் ரேஞ்சர் 800 6x6 ஆஃப்ரோடு வாகனத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகளும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இடவசதி

இடவசதி

டெல்லியை சேர்ந்த பாஃப்னா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடேட் இந்த வாகனத்தில் மாற்றங்களை செய்தது. அதிக இடவசதி கொண்ட காம்பெக்ட் ஆம்புலன்ஸ் என்பதோடு, அதிக திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு அம்சங்கள்

ஆஃப்ரோடு அம்சங்கள்

சாதாரண ரக வாகனங்கள் செல்ல முடியாத சாலைகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் இந்த புதிய ஆம்புலன்ஸ் மூலம் எளிதாக சென்று மருத்துவ உதவிகளை வழங்க முடியும். மேலும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கும் இந்த வாகனங்கள் செல்லத்தக்க வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

இதுகுறித்து போலரிஸ் நிர்வாக இயக்குனர் பங்கஜ் துபே கூறுகையில்," இந்தியாவின் ஊரகப்பகுதிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பகுதிகளில் போலரிஸ் ஆம்புலன்ஸ்களின் செயல்பாடு மிகுந்த சிறப்பானதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

போலரிஸ் 800 6x6 வாகனம் 566.99 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டது. இதில், 40 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 760சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனை 4x4WD மற்றும் 6x6WD டிரைவ் ஆப்ஷனுகக்கு ஒரு சுவிட்ச் மூலம் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 19, 2013, 11:55 [IST]
English summary
At the recently held Emergency Medical Services (EMS) event at the All India Institute of Medical Sciences in New Delhi, Polaris displayed what is perhaps the first all-terrain ambulance in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+