குஜராத் போலீசுக்கு ஏடிவி வாகனங்களை சப்ளை செய்யும் போலரிஸ்!
குஜராத் போலீசாரிடமிருந்து ஆஃப்ரோடு வாகனங்களை சப்ளை செய்வதற்கான பல்க் ஆர்டரை போலரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் ஏடிவி எனப்படும் அனைத்து சாலை நிலைகளிலும் தங்கு தடையின்றி சுலபமாக செல்லும் அம்சங்கள் கொண்ட வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் தனது முதலாவது வர்த்தக ரீதியிலான பெரும் ஆர்டரை பெற்றுள்ளது. குஜராத் போலீசாரிடமிருந்து அந்த ஆர்டர் கிடைத்துள்ளது. குஜராத் மாநில கடற்கரையோர கண்காணிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் இந்த ஆஃப் ரோடு வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ஆர்டரின்படி, தனது ஆர்இசட்ஆர் எஸ் 800 மாடலை சப்ளை செய்ய உள்ளது போலரிஸ்.

ஒப்பந்தம்
வாகன சப்ளை ஆர்டரில், போலீசாருக்கு வாகனத்தை ஓட்டுவதற்கான பயிற்சி, பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை போலரிஸ் வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு
சாதாரண ரோந்து பணிகள், கடற்கரை ரோந்து, கரடு முரடான சாலைகளில் கண்காணிப்பு, பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

எஞ்சின்
ஆர்இசட்ஆர் எஸ் 800 ஏடிவி வாகனத்தில் 54 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 760சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் துணைபுரிகிறது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக அதிக சமநிலை கொடுக்கும் வகையில், இருக்கையின் பின்புறம் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

உந்துசக்தி
0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் தொட்டுவிடும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொண்டது.

ரேட்டில் பார்
விபத்தில் சிக்கினால் கூட பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் உறுதிமிக்க ரேட்டில் பார் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை
இந்த ஆர்டருக்கான மதிப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்தியாவில் ஆர்இசட்ஆர் எஸ்800 ஏடிவி வாகனம் ரூ.12.66 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








