டயர் இல்லாத ஏடிவி வாகனம்: சாத்தியமாக்கிக் காட்டிய போலரிஸ்!

By Saravana

ஏடிவி எனப்படும் கரடு முரடான சாலைகளுக்கு ஏற்ற வாகனங்களை தயாரிப்பதில்ல் அமெரிக்காவின் போலரிஸ் மிக பிரபலமாக திகழ்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் ஏடிவி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், டயர் இல்லாத புதுமையான சக்கரங்களை புதிய ஏடிவி வாகனத்தில் பொருத்தி அறிமுகம் செய்துள்ளது போலரிஸ். காற்றழுத்ததில் இயங்கும் டயருக்கு பதிலாக அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்ட சக்கரங்களாக இவை செயல்படும்.

பராமரிப்பு

பராமரிப்பு

காற்றழுத்தத்தில் இயங்கும் சாதாரண டயர்களுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. ஆனால், இந்த சக்கரங்களுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை.

 மாடல்

மாடல்

போலரிஸ் எம்வி850 என்ற ராணுவ பயன்பாட்டில் உள்ள ஏடிவி வாகனத்தின் அடிப்படையில்தான் இந்த புதிய ஸ்போர்ட்மேன் டபிள்யூவி850 எச்.ஓ வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 சக்கரத்தின் பெயர்

சக்கரத்தின் பெயர்

இந்த புதுமையான வகை சக்கரங்களுக்கு டெர்ரெய்ன்ஆர்மர் என போலரிஸ் பெயரிட்டுள்ளது. இது ராணுவ பயன்பாட்டிற்காக முதலில் உருவாக்கப்பட்டது.

 சக்கரத்தின் ஆயுள்

சக்கரத்தின் ஆயுள்

இந்த வகை சக்கரங்கள் 1,600 கிமீ வரை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும். சக்கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 3 இஞ்ச் ரயில்ரோடு ஸ்பைக்குகள் தேயும் வரை பயன்படுத்தலாம்.

பயன்பாடு

பயன்பாடு

680 கிலோ வரை எடையை சுமக்கும் திறன் கொண்டது. 44.48 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி உள்ளது.

வீடியோ

இந்த புதுமையான சக்கரங்கள் கொண்ட போலரிஸ் ஏடிவி., வாகனத்தின் செயல்பாடுகளை வீடியோவில் பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Polaris, the world's largest ATV manufacturer, has debuted a new ATV with non pneumatic tyres or airless tyres. The name Polaris has given these tyres is TerrainArmor. These new age tyres feature in Polaris's new military grade Sportsman WV850 H.O ATVs.
Story first published: Tuesday, November 19, 2013, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X