காரை டெலிவிரி செய்யாத போர்ஷேவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி

By Saravana

காரை டெலிவிரி செய்யாமல் இழுத்தடித்த போர்ஷே கார் நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் நாகதேவ். கடந்த 2011ம் ஆண்டு ஜூலையில் போர்ஷே கேயென்னி எஸ்யூவி வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளார். முன்பதிவு செய்யும்போதே காருக்குரிய ரூ.87 லட்சத்தை கட்டியுள்ளார். இந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபரில் அவரது முன்பதிவு எந்தவொரு காரணமும் இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Porsche Cayenne

இதையடுத்து, போர்ஷே மீது நாகதேவ் போலீசில் வழக்குப் பதிவு செய்தார். நாகதேவ் போலீசுக்கு போனவுடனேயே முழு பணத்தையும் திருப்பித் தருவதாக போர்ஷே தெரிவித்துள்ளது. ஆனால், நாகதேவ் நுகர்வோர் ஆணையத்தில் இதுகுறித்து புகார் செய்தார்.

இதனை விசாரித்த டெல்லி நுகர்வோர் ஆணையம், கால தாமதத்தால் நாகதேவ் காருக்காக வாங்கிய கடனுக்குண்டான வட்டி ரூ.14,45,529 யும், நஷ்ட ஈடாக ரூ.15 லட்சத்தையும் வழங்க வேண்டும் என போர்ஷேவுக்கு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 9, 2013, 17:03 [IST]
English summary
The German luxury and sports car maker, Porsche has been ordered to pay a fine amounting to nearly INR 30 lakhs by the Delhi State Consumer Disputes Redressal Commission for non delivery of vehicle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+