புதிய காம்பெக்ட் எஸ்யூவியை களமிறக்கும் போர்ஷே
காம்பெக்ட் எஸ்யூவி ஜுரம் இப்போது ஆடம்பர கார் நிறுவனங்களையும் பற்றிக் கொண்டுள்ளது. ஆடம்பர கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் போர்ஷே நிறுவனம் புதிய காம்பெக்ட் ஆடம்பர எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளது. மசான் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி போர்ஷே கேயென் எஸ்யூவியின் மினி மாடலாக வருகிறது.
போர்ஷேவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் புதிய எம்க்யூபி(MQB) பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி அடுத்த தலைமுறை ஆடி க்யூ5 எஸ்யூவியுடன் பல பாகங்களை பங்கிட்டு கொள்ளும். ஆடி க்யூ5 எஸ்யூவியின் எஞ்சின்களையே இந்த எஸ்யூவியும் பெற இருக்கிறது.
வரும் நவம்பரில் நடைபெற இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் இந்த புதிய எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. சர்வதேச அளவில் அறிமுகம் செயய்ப்படும்போது, இந்தியாவிலும் போர்ஷேவின் இந்த புதிய மினி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.45 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ஷே மசான்



Click it and Unblock the Notifications








