போர்ஷேவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் டீசர் வெளியீடு
போர்ஷே மசான் எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் படத்தில் குவாட் எல்இடி விளக்குகளுடன் மிக கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த புதிய எஸ்யூவியை அடுத்த மாதம் 22ந் தேதி துவங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் போர்ஷே பார்வைக்கு வைக்க உள்ளது.
தற்போது தீவிர சோதனையில் இருக்கும் இந்த புதிய எஸ்யூவி கேயென் எஸ்யூவியின் மினி மாடலாக வருகை தர இருக்கிறது. டீசர் படம் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

பிளாட்ஃபார்ம்
போர்ஷேவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் புதிய எம்க்யூபி(MQB) பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி அடுத்த தலைமுறை ஆடி க்யூ5 எஸ்யூவியுடன் பல பாகங்களை பங்கிட்டு கொள்ளும்.

எஞ்சின்
ஆடி க்யூ5 எஸ்யூவியின் எஞ்சின்களையே இந்த எஸ்யூவியும் பெற இருக்கிறது.

விற்பனை
அடுத்த ஆண்டு மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவிலும் இந்த புதிய மினி ஆடம்பர எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும்.

விலை
இந்தியாவில் ரூ.45 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








