விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஆம்புலன்ஸை துரத்திய ப்ரீத்தி ஜிந்தா!

Preity Zinta
சாலையை கடக்க முயன்றவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆம்புலன்சை தனது காரில் துரத்தி சென்று அடையாளம் கண்டுள்ளார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இதுபற்றி போலீசிலும் புகார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நேற்று பஞ்சாப், புனே அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா நேற்று போட்டியை காண்பதற்காக மும்பையிலிருந்து மொஹாலிக்கு விமானத்தில் செல்வதற்கு விமானநிலையம் சென்றார்.

மாலை 4 மணியளவில் தனது காரில் மும்பை விமானநிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதனை பார்த்த ப்ரீத்தி ஜிந்தா அந்த ஆம்புலன்சை விரட்டிச் சென்றார். அதிவேகத்தில் சென்ற அந்த ஆம்புலன்ஸ் நம்பரை (MH04 FP1634 )குறித்து வைத்து அதனை போலீசில் புகார் அளித்துள்ளார்.

டிவிட்டரில் இந்த தகவலை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். மேலும், அடிப்பட்ட நபரை சிலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும், அவர் உயிருடன் இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்று, கவனமில்லாமல் சாலையை கடப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2013, 17:29 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+