அக்டோபர் 13 முதல் குவாட்ரிசைக்கிள்களை இயக்க மத்திய அரசு அனுமதி
மோட்டார் வாகனச் சட்டத்தில் குவாட்ரிசைக்கிள் என்ற புதிய ரக வாகனங்களுக்கு வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அக்டோபர் 13 முதல் குவாட்ரிசைக்கிள் வாகனங்களை இயக்குவதற்கு அனுமதிக்கப்பட உள்ளன.
பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 பயணிகள் வாகனம் குவாட்ரிசைக்கிள் பிரிவில் முதல் பயணிகள் வாகனமாக விற்பனைக்கு வருகிறது. குவாட்ரிசைக்கிள்களுக்கான புதிய விதிமுறைகள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக...
குவாட்ரிசைக்கிள் வாகனங்களை வர்த்தக மார்க்கெட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. பயணிகள் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் கிடையாது
புதிய விதிமுறைகளின்படி நெடுஞ்சாலைகளில் குவாட்ரிசைக்கிள்களை இயக்குவதற்கு அனுமதிக்கப்படாது.

அடையாளம்
முன்புறத்தில் குவாட்ரிசைக்கிள் என்பதை குறிக்கும் வகையில் குவாட்ரிசைக்கிள் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான Q என்ற எழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்பீடு லிமிட்
மணிக்கு அதிகபட்சமாக 70 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

பயணிகள் எண்ணிக்கை
பயணிகள் வாகனத்தில் டிரைவரையும் சேர்த்து 4 பேர் மட்டுமே பயணிக்க முடியும். சரக்கு வாகனத்தில் டிரைவரை சேர்த்து 2 பேர் பயணிக்கலாம்.

எடை
பயணிகள் வாகனத்தின் எடை 450 கிலோவுக்கு மிகாமலும், சரக்கு வாகனத்தின் எடை 550கிலோவுக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

பஜாஜ் ஆர்இ60
தற்போதைய நிலையில், பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 பயணிகள் வாகன மாடல் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருவதற்கான நிலையில் இருக்கிறது. பஜாஜ் ஆட்டோ தவிர, பியாஜியோ, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு விடுவதற்கு திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








