லண்டன் டூ மும்பை... பாதி தூரத்தை கடந்த ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்கள்!!

By Saravana

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகள் பாதி பயண தூரத்தை கடந்துவிட்டன. அடுத்த 4 வாரங்களில் மும்பையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் மற்றும் ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்தது. இந்த கார்களின் சிறப்பியல்களை எடுத்தியம்பும் வகையில், இங்கிலாந்திலுள்ள ஆலையில் இருந்து தரைவழியாக 2 ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்களையும் மும்பையிலுள்ள டாடா மோட்டார்ஸ் தலைமையகத்துக்கு வரப்படுகின்றன.

இறுதி சோதனை

இறுதி சோதனை

ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் கார்கள் வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக இறுதி சோதனை செய்வதற்காக 10,000 மைல்(16,000 கிமீ) தூரத்தை 53 நாட்களில் கடக்கும் வகையில் இந்த சாகசப் பயணத்துக்கு லேண்ட்ரோவர் ஏற்பாடு செய்தது.

'சில்க்' பாதை

'சில்க்' பாதை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைத்த வர்த்தகப் பாதையான 4,000 மைல் தூரம் கொண்ட 'சில்க்' வழித்தடத்தில் இந்த ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகள் வந்துகொண்டிருக்கின்றன. பல்வேறு சவால்களையும், சீதோஷ்ண நிலைகளையும் கடந்து இந்தியா வரும் இந்த ஹைபிரிட் எஸ்யூவி கார்கள் அடுத்த மாதம் 15ந் தேதி மும்பையிலுள்ள டாடா மோட்டார்ஸ் தலைமையகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 கட்டங்கள்

10 கட்டங்கள்

இந்த பயணம் 10 கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், உக்ரைன், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான், சீனா, நேபாளம் வழியாக இந்தியா வருகிறது.

சிறப்பு குழு

சிறப்பு குழு

3 ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனை லேண்ட்ரோவரின் வடிவமைப்புத் துறை எஞ்சினியர்கள் ஓட்டி சோதனை செய்து வருகின்றனர். மேலும், சிறப்பு அழைப்பின் பேரில் ஐரோப்பாவின் 10 நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் இந்த பயணக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பாதி தூரத்தில்...

பாதி தூரத்தில்...

கரடுமுரடான சாலைகள், பல்வேறு கணவாய்களை கடந்து வரும் இந்த பயணம் தற்போது பாதி தூரத்தை(8,411 கிமீ) தாண்டியுள்ளது. தற்போது உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கென்ட்டில் இந்த பயணக் குழுவினர் உள்ளனர். இதைத்தொடர்ந்து, கிர்கிஸ்தான் மற்றும் சீனா வழியாக இந்தியா வர இருக்கிறது. மீதமுள்ள பாதையில் மிக அபாயகராமான சாலைகளையும், இமய மலைத்தொடரையும் கடந்து இந்தியா வர இருக்கிறது.

 ஹைபிரிட் நுட்பம்

ஹைபிரிட் நுட்பம்

3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதேபோன்று, இரண்டிலும் 35 kW திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரும் இருக்கும். மொத்தமாக ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும்போது அதிகபட்சமாக 335 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தப்படும்.

மைலேஜ்

மைலேஜ்

ஒரு லிட்டருக்கு மைலேஜ் என்ற கணக்கீட்டின்படி 18.7 கிமீ மைலேஜை தரும் என்பதோடு, ஒரு கிலோமீட்டருக்கு 169 கிராம் கார்பனையும் வெளியிடுவதாக இருக்கும். இது சாதாரண ரேஞ்ச்ரோவர் மாடல்களைவிட 16 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் தருவதாக இருக்கும்.

ஆப்ரோடு வசதி

ஆப்ரோடு வசதி

ஹைபிரிட் ரேஞ்ச்ரோவரில் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். சாதாரண மாடல்கள் போன்றே டெரைன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் போன்ற ஆஃப்ரோடில் இயக்குவதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் 7.1 வினாடிகளை எடுத்துக் கொள்ளும். ரேஞ்ச்ரோவர் மணிக்கு 217 கிமீ டாப் ஸ்பீடு கொண்டது.

பேட்டரி ஆற்றல்

பேட்டரி ஆற்றல்

முழுவதுமாக மின் மோட்டாரில் இயங்கும் வசதியும் இருக்கிறது. ஆனால், ஒன்றரை கிலோமீட்டர் தூரம் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பேட்டரி ஆற்றலில் செல்ல முடியும். தவிரவும், மணிக்கு அதிகபட்சமாக 48 கிமீ வேகத்தில் மின் மோட்டாரில் காரை இயக்க முடியும்.


More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2013, 11:30 [IST]
English summary

 The Silk Trail 2013 expedition has reached the half-way point from its starting point at the home of Land Rover in Solihull, UK, to its destination in Mumbai, India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+