புதிய டீசல் எஞ்சினுடன் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி!

உலக அளவில் அதிக விரும்பப்படும் எஸ்யூவியான ரேஞ்ச்ரோவருக்கு கடந்த ஆண்டு புதிய 3.0 லிட்டர் டீசல் எஞ்சினை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. தற்போது 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் மற்றும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சினுடன் இந்தியாவில் ரேஞ்ச்ரோவர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கூடுதலாக புதிய 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களிலும் ரேஞ்ச்ரோவரை விற்பனைக்கு கொண்டு வருவதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. புதிய 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 258 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
இந்த காரில் இசட்எஃப் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் இந்த புதிய டீசல் மாடல் எட்டும். மேலும், ஒரு கிலோமீட்டருக்கு 196 கிராம் கார்பனை மட்டுமே வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








