லேண்ட்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் உண்டா, இல்லையா? - விரைவில் முடிவு
கடந்த 2011ல் வெளிவந்த லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி பெரும் வரவேற்பை பெற்ற ஆடம்பர எஸ்யூவி. இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் எவோக் காரின் கன்வெர்ட்டிபில் மாடலை லேண்ட்ரோவர் பார்வைக்கு வைத்திருந்தது. பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த மாடல் வணிக ரீதியில் வெற்றி பெறும் என்பதில் லேண்ட்ரோவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்ட முதல்கட்ட ஆய்விலும் இந்த காருக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட லேணட்ரோவர் இந்த கன்வெர்ட்டிபில் மாடல் திட்டத்தை கிடப்பில் போட்டது. இந்த நிலையில், இந்த புதிய மாடலை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கு லேண்ட்ரோவரின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் சமீபத்திய கூட்டம் ஒன்றில் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து விரைவில் லேண்ட்ரோவர் இறுதி முடிவை அறிவிக்க உள்ளது. இந்த காரை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லலாமா, வேண்டாமா? படங்களை பார்த்துவிட்டு கருத்தை எழுதுங்கள்.













ஹிட் ஆகுமா?
படங்களை பார்த்து ரசித்தீர்களா?... இந்த மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தால் ஹிட் ஆகுமா? உங்களது கருத்துக்களை எழுதலாம்.


Click it and Unblock the Notifications








