மேம்படுத்தப்பட்ட புதிய ரெனோ டஸ்ட்டர் அறிமுகமானது - விபரம்
சில மாதங்களுக்கு முன் டேஸியா பிராண்டில் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது ரெனோ பிராண்டில் மாற்றங்கள் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன், கூடுதல் வசதிகளுடன் வரும் ரெனோ டஸ்ட்டர் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட மாடலாக வரும் புதிய ரெனோ டஸ்ட்டரின் படங்கள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு
ஹெட்லைட்டுகளுக்கு இடையில் இரண்டு படுக்கைவாட்டு குரோமிய பட்டைகள் இணைப்பது போல் மாறியிருக்கிறது. டூயல் விளக்குகள் மற்றும் பகல் நேர ரன்னிங் விளக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

பின்புறம்
பின்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட டெயில் லைட் மற்றும் நம்பர் பிளேட்டுக்கு மேல் பிளாஸ்டிக் பட்டை சொருகப்பட்டுள்ளது.

புதிய அலாய் வீல்
டஸ்ட்டர் பெயர் பொறிக்கப்பட்ட ரூஃப் ரயில்கள் மற்றும் புதிய டிசைன் கொண்ட 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்டிரியர்
ஸ்டீயரிங் வீலில் இப்போது ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, டாப் வேரியண்ட்டில் புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. டூயல் ஏர்பேக்குகளும் இப்போது புதிய டஸ்ட்டரில் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
சென்டர் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவற்றின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.


Click it and Unblock the Notifications








