டஸ்ட்டர் விலையை தாறுமாறாக உயர்த்தி வரும் ரெனோ!

Renault Duster
மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற எஸ்யூவிதானா என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டரின் 110பிஎச்பி ஆற்றல் கொண்ட ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்ட் சென்னையில் ரூ.13.77,901 ஆன்ரோடு விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஓர் ஆண்டுக்குள் டஸ்ட்டரின் டாப் வேரியண்ட் விலை இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி டஸ்ட்டரின் விலையை தாறுமாறாக ரெனோ உயர்த்தி வருவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு காம்பெக்ட் எஸ்யூவிக்கு இந்த விலை சரியானதா என்று வாடிக்கையாளர்கள் தற்போது கூறத்துவங்கியுள்ளனர்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம், மஹிந்திரா எக்ஸ்யூவி உள்ளிட்ட ரியல் எஸ்யூவிகளின் விலைக்கும், மினி எஸ்யூவியான டஸ்ட்டருக்கும் விலையில் அதிக வித்தியாசம் இல்லை. இந்த ரியர் எஸ்யூவிகளில் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.2 லிட்டர் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலும், விரைவில் அறிமுகமாக இருக்கும் ஈக்கோஸ்போர்ட் சரியான விலையில் வந்தால் டஸ்ட்டருக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும். அப்போது, மீண்டும் டஸ்ட்டர் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ரெனோவுக்கு வரலாம் என ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2013, 11:34 [IST]
English summary
French car maker Renault has increased the prices of Renault Duster by more than INR 1 Lac, on road prices within one year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+