ஆல்ட்டோ 800 காருக்கு போட்டியாக வரும் புதிய நிசான் கார்!

டட்சன் கோ என்ற குறைந்த விலை காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நிசான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 புதிய ஹேட்ச்பேக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
மேலும், ஹிந்துஜா குழுமத்தின் டிஃபியன்ஸ் எஞ்சினியரிங் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஹேட்ச்பேக் காரை வடிவமைத்து வருவதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், இந்தியாவுக்காக புத்தம் புதிய 800சிசி பெட்ரோல் எஞ்சினை தயாரித்து வருவதாக நிசான் தெரிவித்துள்ளது. ஹிந்துஜா டிஃபியன்ஸ் எஞ்சினியரிங் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய காரில் இந்த எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
சென்னையிலுள்ள நிசான் - ரெனோ கூட்டணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த புதிய எஞ்சின் வடிவமைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








