டஸ்ட்டர் மட்டும் போதாது... 2 புதிய கார்களை களமிறக்க ரெனோ திட்டம்
டஸ்ட்டர் விற்பனை சரிந்து வருவதையடுத்து, புதிய கார்களை அறிமுகம் செய்வதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதிய எம்பிவி காரும், ஹேட்ச்பேக் காரும் இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது.
உச்சத்த்தில் இருந்த டஸ்ட்டர் விற்பனை மாதத்துக்கு மாதம் சரிந்து வருவதால் ரெனோவின் விற்பனையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிக்கட்டும் முயற்சிகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருவது உறுதியாகியுள்ளது.

டோக்கியோ மோட்டார் ஷோவில் பத்திரிக்கையாளர்களிடம் ரெனோவின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் கில்லிஸ் நார்மன்ட் பேசினார். அப்போது அவர் கூறுகையில்," கார் விற்பனை வளர்ச்சியை தக்க வைப்பதற்கு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதிக தேவை இருக்கும் செக்மென்ட்டில் புதிய கார்களை நிலைநிறுத்த உள்ளோம்," என்று தெரிவித்தார். நார்மண்ட் தெரிவித்த கருத்துக்களில் புதிய எம்பிவி கார் இடம்பெற்றிருப்பதாக ரெனோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் லாட்ஜி எம்பிவியை இந்தியாவில் ரெனோ பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரூ.4 லட்சம் விலையில் புதிய குட்டிக் காரை அறிமுகம் செய்யும் திட்டமும் ரெனோவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 கார்களையும் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு புதிய எம்பிவி கார் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரெனோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








