ரெனோ பல்ஸ் ஸ்பெஷல் எடிசன் கார் பற்றிய விபரம்

By Saravana

பல்ஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் பற்றிய விபரங்களை இணையதளத்தில் ரெனோ வெளியிட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால், சில கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இந்த ஸ்பெஷல் எடிசன் காருடன் ரெனோ வழங்குகிறது.

வாயேஜ் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த ஸ்பெஷல் எடிசன் காருக்கு நேவிகேஷன் வசதி கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஃபோகல் பிராண்டு ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகின்றன. இதன் மதிப்பு ரூ.58,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reno Pulse

ஆனால், இந்த காரின் விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. பல்ஸ் காரின் ஆர்எக்ஸ்இசட் டீசல் டாப் வேரியண்ட்டில் மட்டும் இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ் பேக் வழங்கப்படுகிறது.

இதுதவிர, 2 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 2 ஆண்டுகளுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் 4 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவி திட்டம் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக ரெனோ தெரிவித்துள்ளது.

நிசான் மைக்ராவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனோ பல்ஸ் காரில் 76 பிஎஸ் பவர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 64 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2013, 10:24 [IST]
English summary
Renault India is now offering a special edition of the Pulse hatchback called the Voyage Edition. Going by the information provided on the website it looks like the special edition Pulse does not come with any visual or mechanical upgrades.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+