டிசம்பரில் ரெனோ கார் விற்பனை 32 மடங்கு அதிகரிப்பு

By Saravana
ரெனோ டஸ்ட்டர்
டஸ்ட்டர் கொடுத்த பெரும் பங்களிப்பினால் ரெனோவின் விற்பனை கடந்த டிசம்பரில் 32 மடங்கு அதிகரித்து அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மொத்தம் 5 மாடல்களை ரெனோ விற்பனை செய்து வந்தாலும் டஸ்ட்டர்தான் ரெனோவுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

ஆண்டு இறுதி என்பதால் கார் விற்பனை கடகடத்ததால் பல நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்தன. ஆனால், எவ்வித அலட்டலும் இல்லாமல் டஸ்ட்டர் வழக்கம்போல் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது.

கடந்த மாதம் 4,485 டஸ்ட்டர் கார்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. இதேபோன்று 820 ஸ்காலா கார்களையும், 515 பல்ஸ் கார்களையும் விற்பனை செய்துள்ளதாக ரெனோ தெரிவித்திருக்கிறது. 2011ம் ஆண்டு டிசம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் ரெனோவின் விற்பனை 32 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2011ல் வெறும் 1,401 கார்களை விற்பனை செய்திருந்த ரெனோ கடந்த ஆண்டு 35,052 கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது, ரெனோவின் கார் விற்பனை 25 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 3, 2013, 12:16 [IST]
English summary
Renault India has finally got reasons to celebrate as the company managed to clock 32 fold rise in its December 2012 sales counts as compared to the same period in year 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+