மினி ரயில் போன்ற ரெனோவின் எதிர்கால டாக்சி கான்செப்ட்!

நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத வாகனங்களுக்கான எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டறிவதில் அனேக நிறுவனங்கள் சிரத்தையோடு ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், பிரெஞ்ச் கார் தயாரிப்பாளரான ரெனோ நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொது போக்குவரத்துக்கான புதிய கான்செப்ட் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. ரன்னர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மினி வேன் போன்ற வாகனத்தை ரயில் போன்று இணைத்துக் கொள்ள முடியும்.

டிசைனர்

டிசைனர்

வால்டர் ராபர்ட் என்ற பிரபல டிசைனர் இந்த ஜீரோ எமிசன் வாகனத்தை வடிவமைத்துள்ளார்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஒரு வேனில் 5 பேர் பயணம் செய்ய முடியும். மேலும், கண்ணாடி ஜன்னல்கள் மிக விசாலமாக கொடுக்கப்பட்டிருப்பதால் பயணிகளுக்கு மிக மகிழ்ச்சிகரமான பயண அனுபவத்தை வழங்கும்.

டாக்சி ரயில்

டாக்சி ரயில்

ஒரே நேரத்தில் மூன்று வாகனங்களை இணைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மினி ரயில் போன்று மாறிவிடும்.

சோலார் சிஸ்டம்

சோலார் சிஸ்டம்

இந்த டாக்சியின் மேற்புறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த மின் தகடுகள் மூலம் அதிக மின் ஆற்றலை பெற்று சேமித்து வைக்க முடியும்.

இரவிலும் பயணம்

இரவிலும் பயணம்

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பேட்டரியில் அதிக ஆற்றலை சேமித்து வைக்கும் வசதி கொண்டதால், இரவிலும் தடையில்லாமல் செல்ல முடியும் என்கிறது ரெனோ.

கதவுகள்

கதவுகள்

கதவுகள் பக்கவாட்டில் மிக விசாலமாக திறந்து மூடுவதால் வெகு சுலபமாக ஏறி இறங்க முடியும்.

பாலைவனக் கப்பல்

பாலைவனக் கப்பல்

இந்த வாகனத்தை நகர்ப்புற பயன்பாட்டு வாகனமாக மட்டுமில்லாமல் பாலைவன பயன்பாட்டு வாகனமாகவும் பயன்படுத்த முடியும் என்று வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2013, 11:00 [IST]
English summary
Renault Runner is a futuristic taxi concept that can be transformed into a type of public transportation system by joining each unit with each other as a train. Joining is achieved through a secure wireless command, and up to 3 units/cabins can be connected this way.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+