நகர்ப்புறத்துக்கு ஏற்ற புதிய கான்செப்ட் மாடல் மினி வேன்!
நகர்ப்புறத்துக்கு ஏற்ற புதிய கான்செப்ட் மினி வேனின் படங்கள் மற்றும் விபரங்களை ரின்ஸ்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மைக்ரோமேக்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் மினி வேன் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. 3.7 மீட்டர் நீளம், 2.2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மினி வேனில் இருக்கைகள் கிடையாது. நின்று கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், புதிய தலைமுறையினருக்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும். பேட்டரியில் இயங்கும் இதில் பல புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும். இந்த வேனின் ஒவ்வொரு பாகத்தின் தயாரிப்பு மற்றும் உதிரிபாகங்களை பிரபல நிறுவனங்கள் கையிலெடுத்துக் கொண்டு செய்து கொடுத்துள்ளன.
கிளாசிக் கார்களை பராமரிப்பு மற்றும் டியூனிங் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் வாங்கியிருக்கும் ரின்ஸ்பீடு நிறுவனம் ஆண்டுதோறும் ஜெனீவா மோட்டார் ஷோவுக்காக புதிய கான்செப்ட் மாடல்களை தயாரித்து பார்வைக்கு வைப்பது வழக்கம். ஆனால், இந்த கான்செப்ட் மாடல்கள் இதுவரை உற்பத்தி நிலைக்கு சென்றதில்லை. இந்த மினி வேன் கான்செப்ட்டாவது உற்பத்தி நிலையை எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இந்த பஸ் விற்பனைக்கு வந்தால் 10,000 யூரோவுக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புறத்துக்கு ஏற்ற மினி வேன் கான்செப்ட்

Click it and Unblock the Notifications