பார்முலா-1 தொடர்புடன் வடிவமைக்கப்பட்ட கார்கள்
உலகின் பணக்கார விளையாட்டாக கருதப்படும் பார்முலா-1 பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார்கள் விலை, டிசைன், தொழில்நுட்ப வசதிகள் என அனைத்து விதத்திலும் சாதாரண கார்களிலிருந்து அதிகம் வேறுபட்டு இருக்கின்றன.
இந்த நிலையில், பார்முலா- 1 கார்களால் ஈர்க்கப்பட்டு கிடக்கும் ரசிகர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பிரியர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், அதுபோன்ற டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் சாலையில் ஓட்டத்தக்க கார்களை பல நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன. அதுபோன்று, பார்முலா- 1 கார்களுடன் தொடர்புடன் வடிவமைக்கப்பட்ட கார்களை ஸ்லைடரில் காணலாம்.

மெக்லாரன் எஃப்- 1
பார்முலா - 1 கார்களை ஓட்டுவது போன்ற உணர்வை தரும் வகையில் சாலையில் ஓட்டுவதற்கான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் கார்தான் மெக்லாரன் எஃப்1.

மெக்லாரன் எஃப் 1 டாப் ஸ்பீடு
மணிக்கு 391 கிமீ வேகம் வரை தொடும் அம்சங்களை கொண்டது. கார்பன் ஃபைபர் மோனோகாக் சேஸீயுடன் வடிவமைக்கப்பட்டது.

மினி ஜான்கூப்பர் ஒர்க்ஸ்
1959ல் மினி ஜான் கூப்பர் பார்முலா-1 அணி முதல் வெற்றி பெற்றது. இதன் பொன்விழாவுக்காக 50 மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஸ்பெஷல் எடிசன் கார்கள் தயாரிக்கப்பட்டன.

மினி ஜான்கூப்பர் ஒர்க்ஸ்
மிலிட்டரி பச்சை நிறமும், வெள்ளை கோடுகள் போடப்பட்ட பெயிண்டிங் ஜாப் செய்யப்பட்டிருந்தது. ஜெட் பிளாக் வீல்களுடன் வித்தியாசமாகவும், வசீகரமாகவும் இருந்தது மினி ஜான்கூப்பர் ஒர்க்ஸ்.

ரெனோ மெகான்
2005ம் ஆண்டு நடந்த கார் பந்தயத்தில் வென்றதை கொண்டாடும் விதமாக மெகானே ஸ்போர்ட்ஸ் காரை ரெனோ அறிமுகம் செய்தது. 230 எஃப் ஈ26 என்று பெயரிடப்பட்ட அந்த கார் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 230 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் கொண்டிருந்தது. 0-100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் தொட்டுவிடும். இந்த கார் பிரத்யேக சஸ்பென்ஷன் செட்டிங் மற்றும் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. பக்கவாட்டு கண்ணாடிகளில் ரெனோ அணியின் பார்முலா- 1 டிரைவர்களின் ஆட்டோகிராப் போடப்பட்டிருந்தது.

ஆர்26 மெகானே
2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ மெகானே ஆர்26 கார் லிமிடேட் எடிசனா விற்பனை செய்யப்பட்டது. கார்பன் ஃபைபர் பானட், அலாய் வீல்கள், குறைந்த எடை ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருந்தது.

சூமேக்கர் எடிசன் ஃபியட் கார்
ஃபெராரியின் தாய் நிறுவனமான ஃபியட் தயாரித்த எஃப் ஸ்டைல் கார் இது. இந்த காரை ஒருமுறை ஃபார்முலா ஒன் ஜாம்பவான் மைக்கேல் சூமேக்கர் ஓட்டியிருக்கிறார்.

எஞ்சின்
55 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் 1.1 லி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. அபார்த் ஸ்டைலிங் கிட் மற்றும் ஏபிஎஸ் பாதுகாப்பு வசதி கொண்டிருந்ததை தவிர இதில் வேறொன்றுமில்லை. சூமேக்கரின் ஆட்டோகிராப் இந்த காரின் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்தது.

ஃபெராரி எஃப்355
1994ம் ஆண்டு ஃபெராரி எஃப்355 காரின் பயணம் துவங்கியது. பெர்லினேட்டா மற்றும் கன்வெர்ட்டிபிள் மாடல்களில் விற்பனைக்கு கிடைத்தது.

பார்முலா - 1 கிட்
ஃபெராரி எஃப்355 காருக்கு கூடுதலாக 6,000 பவுண்ட் கொடுத்தால் பார்முலா-1 கிட்டும் கிடைத்தது. பேடில் கியர் ஷிப்ட் பொருத்தப்பட்ட முதல் ஃபெராரி கார் இதுதான்.

இன்ஃபினிடி எஃப்எக்ஸ்
பார்முலா - 1 கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் ஸ்பெஷல் எடிசனாக வெளியிடப்பட்டது. 414 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் எஞ்சின் கொண்டது. மணிக்கு 299 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.

வெட்டலுக்கு பரிசு
இந்த காரை உருவாக்குவதில் நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் பெரும் பங்கு வகித்தார். எனவே, அவரது 26வது பிறந்தநாளுக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.

ஜாகுவார் எக்ஸ்கேஆர்
2001ல் ஜாகுவார் அணி பார்முலா-1 பந்தயத்திற்கு திரும்பியதை கொண்டாடும் வகையில், ஜாகுவார் எக்ஸ்கேஆர் சில்வர்ஸ்டோன் எடிசன் வெளியிடப்பட்டது. மொத்தம் 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

எஞ்சின்
இந்த காரில் 4.2 லி சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 400 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்ட எஞ்சின் இது. 0-100 கிமீ அடைவதற்கு வெறும் 5.3 வினாடிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சிறப்புகளுடன் வந்தது. 20 இஞ்ச் வீல்களும், பிரெம்போ பிரேக்குகளும் கூடுதல் சிறப்பு சேர்த்தன.

ரெனோ ட்விஸி
ட்விஸி எஃப்1 காரை கான்செப்ட் காரை பார்வைக்கு மட்டும் ரெனோ அறிமுகம் செய்தது. 2 சீட்டர் சிட்டி காரான இந்த கார் கார்பன் ஃபைபர் பாடி கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. ஆற்றல் மறுசேமிப்பு வசதிகொண்டது.

சிறப்புகள்
பிரத்யேக பாடி கிட்டுகள், அலாய் வீல்கள் என மிக அசத்தலான இந்த கான்செப்ட் காரை உற்பத்தி செய்யப்படாது என ரெனோ அறிவித்தது.


Click it and Unblock the Notifications








