இந்தியாவில் 4வது கார் ஷோரூம் திறந்த ரோல்ஸ்ராய்ஸ்
இந்தியாவில் 4வது கார் ஷோரூமை அகமதாபாத்தில் திறந்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம். நவநீத் மோட்டார்ஸ் அகமதாபாத்தின் அங்கீகாரம் பெற்ற டீலராக நியமிக்கப்பட்டுள்ளது.
குஜராத்திற்கும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திற்கும் நீண்ட கால பாரம்பரிய பிணைப்பு இருந்து வருகிறது. ராஜ்கோட் மஹாராஜாக்கள் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை பயன்படுத்திய வரலாறு இதற்கு சாட்சி. இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தை தீவிரமாக்கியுள்ள ரோல்ஸ்ராய்ஸ் தற்போது புதிய ஷோரூமை அங்கு திறந்துள்ளது.

அகமதாபாத் ஷோரூம்
அகமதாபாத்தின் தால்தேஜ் கிராஸ் ரோட்டில் 2,637 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. 2 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இந்த புதிய ஷோரூமில் பார்வைக்கு நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது. கோஸ்ட், ஃபான்டம் மற்றும் ரயீத் கார்களை இங்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

விருப்பம்போல் வாங்கலாம்
மொத்தம் 44,000 வெளிப்புற வண்ணங்களில், எண்ணற்ற லெதர், மரம் மற்றும் இதர அலங்காரங்களுடன் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை விருப்பதிற்கு தக்கவாறு கஸ்டமைஸ் செய்து வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4வது ஷோரூம்
மும்பை, டெல்லி, ஹைதராபாத்துக்கு அடுத்து அகமதாபாத்தில் புதிய கார் ஷோரூமை ரோல்ஸ்ராய்ஸ் திறந்து அடியெடுத்து வைத்துள்ளது.

அடுத்து சண்டிகரில்
அகமதாபாத்துக்கு அடுத்து சண்டிகரில் புதிய ஷோரூமை ரோல்ஸ்ராய்ஸ் திறக் உள்ளது.

விலை விபரம்
இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் விலை விபரம்
பான்டம்: ரூ.6.5 கோடி
பான்டம் நீட்டிக்கப்ட்ட வீல் பேஸ்: ரூ. 7.6 கோடி
பான்டம் டிராப்ஹெட் கூபே: ரூ.7.62 கோடி
பான்டம் கூபே: ரூ.7.05 கோடி
கோஸ்ட்: ரூ.4.30 கோடி
கோஸ்ட் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ்: ரூ.4.90 கோடி
ரயீத்: ரூ.4.60 கோடி


Click it and Unblock the Notifications








