ஐதராபாத்தில் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் திறப்பு

ஆடம்பர கார் தயாரிப்பாளரான ரோல்ஸ்ராய்ஸ் நம் நாட்டு வாடிக்கையாளர்களுடன் நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.
ஆனால், நேரடியான டீலர் இல்லாமல் இதுவரை கார்களை ஆர்டர் பெற்றுக் கொண்டு டெலிவிரி கொடுத்து வந்தது.ட
இந்த நிலையில், இந்தியாவில் தங்களது பாரம்பரிய உறவை வலுப்படுத்தும் வகையில் தற்போது நேரடி டீலர்களை நியமித்து வருகிறது.
டெல்லி, மும்பையில் டீலர்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தென் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் நெருக்கமான, விரைவான சேவையை வழங்கும் வகையில் புதிய கார் ஷோரூமை திறந்திருக்கிறது.
5,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஷோரூமில் கோஸ்ட், ஃபாந்தம் கார்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களுக்கான ஓய்வறையும் சிறப்பான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஷோரூம் மூலம் தென் இந்தியாவில் தங்களது மார்க்கெட் மேலும் வலுப்பெறும் என ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








