கார்பன் ஃபைபர் பாடியுடன் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்!
லிமிடேட் எடிசன் மாடல்களில் கார்பன் ஃபைபர் பாடியுடன் கூடிய கார்களை தயாரித்து கொடுப்பது குறித்து ரோல்ஸ்ராய்ஸ் பரிசீலித்து வருகிறது.
ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர் விருப்பத்துக்கு இணங்க கஸ்டமைஸ் செய்துதான் டெலிவிரி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ரோல்ஸ்ராய்ஸ் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ ஐ சீரிஸ் எலக்ட்ரிக் கார்களை கார்பன் ஃபைபர் பாடியுடன் அறிமுகம் செய்துள்ளது.

இதே தொழில்நுட்பத்தில் தனது லிமிடேட் எடிசன் கார்களை தயாரிக்க ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளது. சாதாரண மாடலைவிட கார்பன் ஃபைபர் கொண்ட கார்களை கஸ்டமைஸ் செய்து கொடுப்பது எளிது என்பதால் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








