இந்திய கலாச்சார சின்னத்துடன் ஸ்பெஷல் கார்: ரோல்ஸ்ராய்ஸ் அறிவிப்பு
இந்தியாவின் கலாச்சார பெருமைகளை பிரதிபலிக்கும் சின்னத்துடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் காரை ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.அதற்கான சின்னத்தை தேர்வு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் டிராகன் புத்தாண்டுக்காக டிராகன் சின்னத்துடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் பான்டம் காரை அந்நாட்டில் ரோல்ஸ்ராய்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதேபோன்று இந்தியாவிலும் சிறப்பு பதிப்பை வெளியிட உள்ளது.

சின்னத்தில் சிக்கல்
பல்வேறு கலாச்சாரங்களின் சங்ககமாக திகழும் இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான சின்னத்தில் அந்த காரை வெளியிட முடிவு செய்துள்ளோம். பொதுவான அம்சங்களுடன் கூடிய அந்த சின்னத்தை தேர்வு செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன," என்று ரோல்ஸ்ராய்ஸ் உயரதிகாரி ஹர்பிரைடு ஹசனோர்ல் கூறினார்.

அறிமுகம்?
இந்த ஆண்டு இறுதியில் இந்திய சின்னம் தாங்கிய ஸ்பெஷல் எடிசன் பான்டம் காரை ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

டெலிவிரி
அடுத்த ஆண்டு முதல் ஸ்பெஷல் எடிசன் கார் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்.

கல்யாண சீசன் பதிப்பு
கடந்த ஆண்டு இந்தியாவில் திருமண சீசனுக்கான சிறப்பு பதிப்பு காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டது. அதில், மணமகன், மணமகள் பெயர்களை பொறித்து தரப்பட்டது நினைவிருக்கலாம்.

சீன எடிசன்
மாதிரிக்காக ஸ்லைடரில் சீனாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் டிராகன் புத்தாண்டுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பெஷல் எடிசன் பான்டம் காரின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








