எஸ்யூவி தயாரிப்பு குறித்த தீவிர பரிசீலனையில் ரோல்ஸ்ராய்ஸ்!
எஸ்யூவி தயாரிப்பு குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் எஸ்யூவி கார்கள் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து கார் நிறுவனங்களும் தற்போது எஸ்யூவி மாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பென்ட்லீ புதிய எஸ்யூவி கான்செப்ட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த உந்துதலால் நேர் போட்டியாளராக விளங்கும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் எஸ்யூவி களத்தில் குதிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
புதிய எஸ்யூவி தயாரிக்கும் திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் சிஇஓ டார்ஸ்டன் முல்லர் கருத்து தெரிவித்துள்ளார். ரோல்ஸ்ராய்ஸ் எஸ்யூவி வந்தால் அது பென்ட்லீ எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








