மீண்டும் புதிய ஆடம்பர காரின் டீஸரை வெளியிட்ட ரோல்ஸ்ராய்ஸ்
ரயீத் என்ற பெயரில் புதிய கூபே ரக ஆடம்பர காரை ஜெனிவா மோட்டார் ஷோவில் ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. கோஸ்ட் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய கூபே ரக காரின் டீஸர் படத்தை ரோல்ஸ்ராய்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
ரயீத் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு கார் மாடலை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்து வந்தது. 1938ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட அந்த காரில் 4.2 லிட்டர் எஞ்சினுடன் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், இந்த புதிய ராத் கார் புதிய தலைமுறை அம்சங்களுடன் கூடிய டிசைன் மற்றும் வசதிகளுடன் வருகிறது. 2 கதவுகளை கொண்டிருக்கும்.

டீஸர் படத்தில் எதிர்பார்ப்பை கூட்டும் இந்த புதிய ஆடம்பர கார் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் தரிசனம் தர காத்திருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








