ஜிப்ஸியை பட்டைத் தீட்டி களமிறக்கும் மாருதி!!

By Saravana

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மார்க்கெட்டில் மல்லுக்கட்டி வரும் ஜிப்ஸி எஸ்யூவியில் மாற்றங்களை செய்து மேம்படுத்தப்பட்ட மாடலாக களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராலி ரேஸ் பிரியர்களையும், ராணுவத்தினரையும் கவர்ந்த எஸ்யூவி மாடல்.

இந்த நிலையில், ராணுவ பயன்பாட்டு வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டதால் பட்டியலில் இருந்து ஜிப்ஸி நீக்கப்பட்டுவிட்டது. இதனால், ஜிப்ஸி விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆர்டரின்பேரில் தனி நபர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜிப்ஸியில் சில மாற்றங்களை செய்து, புதிய எஞ்சின்களுடன் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜிப்ஸியில் எஸ்டீம் காரின் 1.3 லிட்டர் எஞ்சின் மாற்றப்பட்டது. இந்த எஞ்சின் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த நிலையில் மேம்படுத்தப்பட்டு வரும் புதிய ஜிப்ஸியில் ஈக்கோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின் மாடல் இல்லாததும் மார்க்கெட்டில் ஜிப்ஸி வழக்கொழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. எனவே, புதிய ஜிப்ஸியில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என கூறப்படுகிறது.

கத்தரி

கத்தரி

ஜிப்ஸியின் நீளத்தையும் 4 மீட்டருக்குள் சுருக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், வரிச்சலுகையை பெற முடியும்.

ராணுவ பயன்பாடு

ராணுவ பயன்பாடு

டர்போசார்ஜர் கொண்ட எஞ்சின்களுடன் புதிய ஜிப்ஸி வருமேயானால், மீண்டும் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஜிப்ஸிக்கு கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தார் பூசுமா?

தார் பூசுமா?

ஜிப்ஸி மார்க்கெட்டிலிருந்து விலகியிருப்பது தற்போது மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு வசதியாக போய்விட்டது. இந்த நிலையில், மீண்டும் ஜிப்ஸி வர இருப்பதாக வெளியான தகவல் ரேஸ் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2013, 16:31 [IST]
English summary
If the rumors to be believed about Gypsy, Maruti Suzuki might introduce a new facelift Gypsy with minor updates in terms of looks and new engine options. Company is planing to replace the current G13 engine with G12B engine and also plans to introduce diesel engine in new Gypsy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+